search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழிவின் விளிம்பில் இருக்கும் பிளம்ஸ்,பேரிக்காய் விவசாயத்தை காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விளைந்துள்ள மரம் மற்றும் அறுவடை செய்யப்பட்டுள்ள பேரிக்காய்கள்.

    அழிவின் விளிம்பில் இருக்கும் பிளம்ஸ்,பேரிக்காய் விவசாயத்தை காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

    • கொடைக்கானலில் பெரும்பாலான தோட்டங்களில் அதிகப்படியான ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
    • விளைச்சல் குறைந்து வருவதால் இதனை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதிகளின் அதிக இடங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். பெரு–ம்பாலான தோட்டங்களில் அதிகப்படியான ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளம்ஸ் பழங்களை கொடைக்கானல் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்பி வாங்கி செல்வதுண்டு. இதேபோல மருத்துவ குணம் கொண்ட பேரிக்காய்கள் ஜாம் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைச்சல் கைகொடுத்தபோதும் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காத நிலைேய உள்ளது.

    கடந்த சில வருடங்களாக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விளைச்சல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மருத்துவ குணம் கொண்ட இந்த வகையான பழங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வாங்கி உண்ணும் பழங்களாக இவை இருந்து வருகிறது. எனவே பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் பழங்களின் விளைச்சலை மீட்டெடுக்க தோட்டக்க–லைத்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கிடைக்கும் பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் பழங்கள் அதிக உற்பத்தி செய்யும் இடமாக கொடைக்கானல் உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் விளைச்சல் குறைந்து வருவதால் இதனை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×