search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    குத்தகையை இந்து சமய அறநிலை யத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதி க்கப்பட்டது.

    நடப்பாண்டும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

    இச்சூழலை கருத்தில் கொண்டு தற்போது குத்தகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி அனுப்ப ப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸை திரும்பப் பெருவதோடு, குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காலங்காலமாக இக்கோவிலின் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் வெண்டை யம்பட்டி தான்தோ ன்றீஸ்வரர் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகில் ஆகியோர் பேசினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×