என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டவுன் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
கொடியேற்றம்
இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான திருநெல்வேலி என பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெற்றது.
முற்காலத்தில் வேதப்பட்டர் சுவாமிக்கு நெய் வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்லை காய வைத்துவிட்டு தாமிர பரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது.
சுவாமிக்கு நெய் வேத்தியம் படைப்பதற்காக காயவைத்த நெல் மழையில் நனைந்து விடுமோ என்ற வேதனையில் வேதப்பட்டர் வந்து பார்த்தபோது நெல் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்தருளியதால் திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம்
இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் வகையில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று காலை வேதப்பட்டர் மரச்சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் நெல்மணிகளை யாசகம் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து அதனை மகாநந்தி மண்டபத்தில் உலர வைக்கும் நிகழ்ச்சியும், அதன் பின்னர் கோவிலில் உள்ள கொற்றாம்மரைகுளத்தில் வேதப் பட்டர் குளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நெல் மணிகளை உலர வைத்த இடத்தில் பதிகம் பாடி நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் வேதப்பட்டருக்கு சுவாமி அம்மாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி நிகழ்ச்சி
இன்று மாலை ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மாள் உட்பிரகாரத்தில் காட்சி கொடுக்கின்றார். வருகிற 4-ந்தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுது சுவாமி-அம்மாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சந்திப்பு கைலாசப்புரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
பிற்பகல் 12 மணிக்கு கோவிலில் சவுந்திர மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடைபெறும். மறுநாள் வெளித்தேப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்