என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும்- எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. மாரிமுத்து அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான சாகுபடி பரப்பை விட அதிக அளவில் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால் யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் விவசாயிகளிடையே சாகுபடியில் ஒரு சுணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நமது நாட்டில் உர உற்பத்தி குறைவு காரணமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் போதிய அளவு உரம் கிடைப்பதில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.