search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 102 இடங்களில் நாளை காய்ச்சல் தடுப்பு முகாம்
    X

    கோவையில் 102 இடங்களில் நாளை காய்ச்சல் தடுப்பு முகாம்

    • தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    அதன்படி வருகிற 1-ந் தேதியில் இருந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட, கண்டறி யப்பட்ட கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ டிக்கைகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவையிலும் நாளை சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்க உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 102 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்கிறது. மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கிராம பகுதிகளில் இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில் ஒவ்வொரு முகாமுக்கு டாக்டர், நர்சு உள்பட 4 பேர் பணியில் இருப்பா ர்கள். முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட வர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்ப ட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். முகாமில் நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதவிர வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 7 பேர் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று அரசு ஆஸ்பத்திரி டீன் தெரிவித்தார்.

    Next Story
    ×