என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் 4 நாட்களுக்குப் பின் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்
- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் செல்லக்கூடிய மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
- இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்ப பெற்றது.
தூத்துக்குடி:
தமிழக கடலோரப்பகுதி கள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் காற்று மாறுபாடு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் செல்லக்கூடிய மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள மீனவர்கள் கடந்த 4 நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். மேலும் வானிலை மையம் எச்சரிக்கையை மீனவர்களுக்கு தெரியப் படுத்தும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்ப பெற்றது. இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பின் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 189 விசைப்படகுகளில் மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் புறப்பட்டு சென்றனர்.