search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா கொடியேற்றம் - பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்த படம்.

    விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா கொடியேற்றம் - பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

    • விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
    • விழாவில் 7-ம் நாளான வருகிற (29-ந் தேதி) இரவு 7 மணிக்கு நடராஜர் சபாபதி சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருள் நடக்கிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து கொடிப்பட்டம் ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் 10.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தியம் பெருமான் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, எழுத்தர் மகாராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவிழா பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

    விழா நாட்களில் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் 7-ம் நாளான வருகிற (29-ந் தேதி) இரவு 7 மணிக்கு நடராஜர் சபாபதி சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளலும், 9 மணிக்கு அபிஷேகமும், 10 மணிக்கு வெள்ளை சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது.

    8-ம் நாளான (30-ந் தேதி) அதிகாலை 2 மணிக்கு ராஜராஜேஸ்வரி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு ஸ்ரீநடராஜர் பச்சை சார்த்தி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    9-ம் நாளான மே 1-ந் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. 10-ம் நாளான மே 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 5-ந் தேதி தீர்த்தவாரியும், 6-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×