search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளுக்கு கால், வாய் நோய் தடுப்பூசி போடும் பணி நாளை மறுநாள் தொடக்கம்
    X

    கால்நடைகளுக்கு கால், வாய் நோய் தடுப்பூசி போடும் பணி நாளை மறுநாள் தொடக்கம்

    • வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியம் கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
    • கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றுதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் 'குக்கிராமங்களில் உள்ள 2.92 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி (கோமாரி நோய்) போடும் பணி நடைபெறுகிறது.

    இந்த தடுப்பூசி போடும் பணி வருகிற 6 ஆம் தேதி முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் டிசம்பர் 21 முடிய உள்ள காலத்தில் விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    இந்த தடுப்பூசி போடும் பணியை வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியத்தில் உள்ள கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.

    எனவேநான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவை, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் அனைத்து எருதுகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட கால்நடை தொடர்பான விவரங்களை பதிவேற்றுதல் இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    எனவே, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் போது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100 சதவீதம் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி மேற்கொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கால்நடை வளர்ப்போர்கள் கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்கனர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×