search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு  இலவச மரக்கன்றுகள் விநியோகம்
    X

    விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம் செய்த போது எடுத்த படம்.

    நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்

    • தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
    • விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் தற்போது, முதற்கட்டமாக தேக்கு, மகாகனி, செம்மரம், வேங்கை, ஈட்டி போன்ற மரக்கன்றுகள் 11,000 எண்கள் தனியார் நாற்றங்கால்களிலிருந்து பெறப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நாமக்கல் வட்டார அட்மா தலைவர் பழனிவேல் தலைமையில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பேபிகலா, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலையில் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் ரசிகப்ரியா உடனிருந்தார். உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், திலீப்குமார், மற்றும் மாலதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இது தொடர்பாக நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் தற்போது, முதற்கட்டமாக தேக்கு, மகாகனி, செம்மரம், வேங்கை, ஈட்டி போன்ற மரக்கன்றுகள் 11,000 எண்கள் தனியார் நாற்றங்கால்களிலிருந்து பெறப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. விவசாயி நிலங்களின் வரப்புகளில் குறைந்த செலவில் வேளாண்மை பயிர்களின் மகசூல் பாதிக்காமல் நடவு மேற்கொள்ளவேண்டும். இத்திட்டத்தில் தேக்கு, ஈட்டி, மகோகனி, செம்மரம், வேங்கை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படுகின்றது. அதிகப்பட்சம் அனும திக்கப்படும் மானியம் ஏக்கருக்கு ரூ1,400 மரக்கன்றுகள் நடவு பணி டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×