search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வாரிய பணியாளர்களுக்கு   ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்  -ஊழியர்கள் கோரிக்கை
    X

    மின்வாரிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் -ஊழியர்கள் கோரிக்கை

    • மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில், மின்வாரிய என்ஜினியர் அசோசியேசன் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், என்ஜினி யர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன், சி.ஐ.டி.யூ., மாவட்டத் தலைவர் துரை, பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிரிதரன், அண்ணா தொழிற் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜ், அம்பேத்கர் எம்ளாயிஸ் யூனியன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், சம்மேளனம் மாவட்டத் தலைவர் ரங்கநாதன், எம்ளாயிஸ் பெடரேசன் மாநில செயலாளர் டேவிட், பாட்டாளி தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரசேகர், என்ஜினியர்ஸ் யூனியன் மாவட்டத் தலைவர் மாணிக்கம், என்.எல்.ஓ., மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினார்.

    இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கத்தினரும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில், மறுபகிர்வு, அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வை உடனடி யாக வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். மின்சார மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×