search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வெளிநாட்டு தம்பதிகள் வருகை
    X

    வெளிநாட்டினர் தர்மபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வெளிநாட்டு தம்பதிகள் வருகை

    • திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஸ்வட்லானாக்ரூசர், இலோனா கலாட்டினோவா ஆகியோர் தமிழ்நாட்டின் ஆன்மீக கலாச்சாரத்தின் மீது பற்றுதல் கொண்டதன் காரணமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.அவர்களுக்கு கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார்.

    பின்னர் நல்லடையில் உள்ள அக்னி ஸ்தலமான பரணீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர.

    இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அங்கே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகளிடம் ஆசீர் பெற்னர்.

    அவர்களுக்கு தர்மபுரம் ஆதீனம் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டினருடன் வந்திருந்த கோபிநாத், குரு, சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×