என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 10,880 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது-கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
- 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ. 1000 பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் 35 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகிறது
தூத்துக்குடி:
முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டார், மிகப்பி ற்படுத்தப்பட்டார், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேற்படி மக்களின் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றிற்காக பல திட்டங்களின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீடானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு 30 சதவீதமும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதமும், ஆதிதிராவிடருக்கு 18 சதவீதமும் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீட்டு முறைநடைமுறையில் உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பள்ளிப்படிப்பு முதல் இளங்கலைப்பட்ட படிப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை, அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தணையுமின்றி கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் பட்டயபடிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பு பயில்பவர்களுக்கு குடும்பத்தில் முதல் பட்டய, பட்டதாரியாகவும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
கிராமப்புறங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6 -ம் வகுப்பு வரை பயிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டொன்றுக்கு ஊக்கத்தொகையாக 3 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிக்கு ரூ. 500 மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ. 1000 பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகையானது மாணவி களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 38 விடுதிகள் இயங்கி வருகிறது. இவற்றில் 35 விடுதிகள் பள்ளி விடுதிகளாகவும், 3 கல்லூரி விடுதிகளாகவும் செயல்பட்டு வருகிறது.
இவ்விடுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ் வழங்கப்பபடுகிறது. எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 10,880 இலவச மிதிவண்டிகள் ரூ. 5.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்