search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்துங்கநல்லூரில் கிராம உதயம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    செய்துங்கநல்லூரில் கிராம உதயம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

    • செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
    • முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை, மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை காவேரி மருத்துவமனை மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பாக செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    கலைநன்மணி விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி நன்றி கூறினார். முகாமில், காவேரி மருத்துவமனை மருத்துவர் சிந்துஜா குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அகிலன் முகாமை ஒருங்கிணைத்தார். இந்த முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை, மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் வசதி குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    Next Story
    ×