search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
    X

    குன்னூரில் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

    • விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வனத்துறை அறிவுறுத்தல்
    • தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்க ஏற்பாடு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அங்கு தேயிலைக்கு இடையே ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது. எனவே அவர்கள் தோட்டக்கலை மற்றும் வனத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்படும் சில்வர் ஓக் நாற்றுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்னூர் வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் சில்வர் ஓக் மரக்கன்றுகள் மற்றும் தனியார் பட்டாநிலங்களில் ஒரு ஏக்கருக்கு 100 நாற்றுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ் போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் முருகன் (செல்போன் எண்: 90471 43198), கோபாலகி ருஷ்ணன்: 94420 07872, ராஜ்குமார்: 94422 93969 மற்றும் வனக்காப்பாளர் ஞானசேகர்: 96299 80058 ஆகிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×