search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
    X

    விநாயகர் சிலைகளை கரைக்க படகு மூலம் எடுத்து சென்றனர். 

    விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

    • ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
    • விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 10 சிலைகள் போலீஸ் பாதுகாப்போடு விதிமுறைகளுடன் ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து சிலைகளை படகு மூலம் கொண்டு கரைப்ப தற்காக திட்டமிட்டனர்.

    ஆனால் படகு ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனதால் சிலைகளை உடனே கரைக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களிடம் வலியுறுத்தினார்.

    கையில் எடுத்து சென்றால் சிலைகளை முறையாக கடலில் கரைக்க முடியாது. எனவே படகு வந்ததும் அதில் கொண்டு சென்று கரைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால், இந்து முன்னணி அமைப்பு பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய சிலைகளை பெண்களே கையில் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.

    பின்னர் படகு வந்ததும் அதில் கொண்டு சென்று நடுக்கடலில் விநாயகரை விஜர்சனம் செய்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் தீயணைப்பு துறையினர் கடலோர காவல் குழும போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×