search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் திருவிழாக்களால் அய்யலூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு
    X

    அய்யலூர் சந்தையில் குவிந்த விவசாயிகள், வியாபாரிகள்.

    தொடர் திருவிழாக்களால் அய்யலூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

    • ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு கோவில்களில் பொங்கல் வைத்து கிடா ெவட்டுவது வழக்கம். இதனால் தற்போதே ஆடுகளை வாங்கி வளர்க்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இன்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழ க்கிழமை தோறும் ஆட்டு ச்சந்தை கூடி வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, கோழி, காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புது க்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு கோவில்களில் பொங்கல் வைத்து கிடா ெவட்டுவது வழக்கம். இதனால் தற்போதே ஆடுகளை வாங்கி வளர்க்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7500 முதல் ரூ.9000 வரை விற்பனையானது. குளிரை தாங்கி வளரும் செம்மறி ஆட்டுக்குட்டிகள் ரூ.3000க்கு விலை கேட்கப்பட்டது. இளம் நாட்டு கோழிகள் கிலோ ரூ.350க்கு விற்பனையானது.

    அய்யலூர் சந்தையில் பல வருடங்களாக வியா பாரிகள், விவசாயிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெளி மாவட்ட ங்களில் இருந்து அ திக அளவில் வருகின்றனர். இங்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    ஆனால் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சந்தையை எடுத்து நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    Next Story
    ×