search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தங்ககுதிரை எடுக்கும் திருவிழா
    X

    பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். உள்படம்: கலிதீர்த்த அய்யனார் கோவிலில் தங்ககுதிரை எடுக்கும் திருவிழா நடந்தது.

    அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தங்ககுதிரை எடுக்கும் திருவிழா

    • சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள குதிரை சிலைக்கு வண்ணம் பூசபட்டது.
    • கலிதீர்த்த ஐயனார் சுவாமிக்குசிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

    இக்கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனுக்கு ஏராளமான குதிரை சிலை வைப்பது வழக்கம்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள குதிரை சிலைக்கு வண்ணம் பூசபட்டது.

    பின்னர் தங்ககுதிரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழாவில் ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, குதிரையாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி, தப்பு, கொம்பு உள்ளிட்ட நாட்டுபுற கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பெண்கள் பால்குடம் எடுத்து வர 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கலிதீர்த்த அய்யனார் கோவிலை வந்தடைந்தது வழிநெடுகிலும் பக்தர்கள் தங்ககுதிரைக்கு மாலை அணிவித்தனர்.

    இதையடுத்து கலிதீர்த்த ஐயனார் சுவாமிக்குசிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.

    இரவு வான வேடிக்கையும் அன்னதானமும் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×