என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
- கடலூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
- அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது.
கடலூர்:
பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக கடலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மர்ம நபர்கள் பஸ் பின்பக்க கண்ணாடி மீது திடீரென்று கல் வீசினர். அப்போது பலத்த சத்தத்துடன் கண்ணாடி உடைந்ததோடு, உள்ளிருந்த பயணிகள் அலறி கத்தினர். பின்னர் அரசு பஸ் உடனடியாக நிறுத்தி மர்மநபர்கள் யார் என்று பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதனை தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உடனடியாக அரசு பஸ்ஸை கடலூர் நோக்கி டிரைவர் கொண்டு சென்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடி உடைத்தது யார்? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.