என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும் - புதிய கலெக்டர் பேட்டி
- தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக லட்சுமிபதி நேற்று பொறுப்பேற்றார்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக லட்சுமிபதி நேற்று பொறுப்பேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தின் ஊரக பகுதிகள், நகரப்பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் முழு அளவிலான வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், ஒட்டுமொத்த நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் மாவட்ட கலெக்டர் என்ற முறையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் குடிநீர், சாலை, பொது சுகாதாரம், திடக்கழிவு திட்டங்கள் போன்ற அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும். மக்கள் குறை தீர்ப்பு முகாமில் விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் விரைந்து தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் பொருளாதார தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் திகழ்கிறது. இந்த மாவட்டம் முழு அளவிலான வளர்ச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டம், மாணவர்களின் கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாடு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானவேவ் ராவ், சப்-கலெக்டர் கௌரவ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்