search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடையூர் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்
    X

    எடையூர் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்

    • பல கி.மீ. தொலைவில் உள்ள முத்துப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    எடையூர் சங்கேந்தி அம்மலூர் வர்த்தக சங்க தலைவர் மாதவன் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எடையூர் சங்கேந்தி பகுதியை சுற்றி பின்னத்தூர், உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம், செறுபனையூர், பாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை எடையூர், நாச்சிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியிலும், பாண்டியில் உள்ள உயர்நிலை பள்ளியிலும் படிக்க வைத்து வருகின்றனர்.

    ஆனால், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வாறு வேண்டுமேயானால், பல கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது.

    அவ்வாறு அங்கு சென்று படித்து வரும் மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எடையூர் கிராமத்தை மையமாக வைத்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×