search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை பேட்டையில்  கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவிக்கு அரசு பணிக்கான ஆணை
    X

    நம்பிராஜன் மனைவிக்கு அரசு பணிக்கான ஆணையை அவரது குடும்பத்தினரிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கிய காட்சி.

    நெல்லை பேட்டையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவிக்கு அரசு பணிக்கான ஆணை

    • நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பணிக்காக சென்றபோது அவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முக்கிய கொலையாளியான சுந்தரபாண்டி கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நங்கையார் சந்திப்பு போலீசிலும், துரை முருகன் என்ற ராஜா பேட்டை போலீசிலும் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேச்சுவார்த்தை

    இதற்கிடையே கொலையாளிகள் அனைவரை யும் கைது செய்ய வேண்டும், நம்பிராஜன் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில் நம்பிராஜனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் அரசு பணிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    பணி ஆணை

    அதன்படி இன்று காலை நம்பிராஜனின் மனைவி பேச்சியம்மாள் என்ற பேச்சிக்கு ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரவு பதிவேற்ற கணிணி ஆபரேட்டர் பணிக்கான ஆணையை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார்.

    ஆதரவற்ற விதவை சான்றிதழ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அப்போது நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    உடலை பெற்றுக்கொண்டனர்

    இதையடுத்து நம்பிராஜனின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பின்னர், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருந்த நம்பிராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நம்பிராஜன் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    இதனையொட்டி நடுக்கல்லூரில் தொடங்கி நெல்லை அரசு ஆஸ்பத்திரி வரையிலும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×