search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    விழாவில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராகேஷ் பெர்னாண்டோ ஒரு மாணவிக்கு பட்டம் வழங்கியபோது எடுத்த படம். கல்லூரி செயலாளர் நாராயண ராஜன், கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி அருகில் உள்ளனர்.

    திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை டாக்டர் ராகேஷ் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
    • கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தலைமையில், பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை டாக்டர் ராகேஷ் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு

    புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. எதிர்காலத்தில் மருத்துவ துறையிலும் செயற்கை நுண்ணறி வின் தாக்கம் இருக்கும். எனவே செவிலி யர்களும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அறிவை வளர்த்து கொ ள்ள வேண்டும். செவிலியர்கள் எப்போதும் மனித நேயத்துடனும், சேவை மனப்பான்மை யுடனும் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உறுதிமொழி ஏற்பு

    பின்னர் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தலைமையில், பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×