search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
    X

    பட்டமளிப்பு விழா நடந்தது.

    பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

    • ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தி மாடர்ன் நர்சரி, பிரைமரி பள்ளியின் 17-வது ஆண்டு விழா மற்றும் 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர்பாஸ்கர், வட்டார கல்வி அலு வலர்கள் அறிவழகன், பாலசுப்ர மணியன், டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வேதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டம ளித்து சிறப்புரையாற்றினார். விழாவின் சிறப்பு நிகழ்வாக காமெடி நடிகர் போண்டா மணி குழந்தைகளுடன் நடனமாடி, பெற்றோர்களை உற்சாகப்படுத்தி பேசினார்.

    விழாவில் திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மைக்குழு உறுப்பினர் செல்வகணபதி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் உஷா சண்முகசுந்தர், மின்னல் கொடி பாலகிருஷ்ணன், பாரதமாதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எடையூர் மணிமாறன், டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் காளி தாஸ், நேஷனல் பள்ளியின் தாளாளர் விவேகானந்தன், மேஜிக் புகழ் அகிலன், கராத்தே முத்துக்குமார், அங்கை ராஜேந்திரன், ஆசிரியர்கள் அருளரசு, வேதரத்தினம், சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தாளாளர் அபூர்வநிலா அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் தீபா ராணி ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் ஆனந்தம் அறக்கட்ட ளையின் நிறுவனர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் விஜயராஜ் மற்றும் ஆசிரியர்கள் வீரலட்சுமி, திரிபுரசுந்தரி, திவ்யா, அபிராமி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×