என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு- பொதுமக்கள் சாலை மறியல்
- பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் உள்ள வீடுகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிதண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமம் அடைந்தனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிதண்ணீர் குழாயை சீரமைத்து அதில் கழிவு நீர் கலக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.