என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஹாலோவீன் தின கொண்டாட்டம்
- லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார்.
- மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து ஹலோவீன் தினத்தை கொண்டாடினர்
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஹாலோவீன் தின கொண்டாட்டம் நடைபெற்றது. மாணவி ஹரிணி இறைவணக்கம் பாடினார். முத்து ஜனனி வரவேற்றார். நிவேதிகா நிகழ்ச்சித் தொகுப்பு வழங்கினார். அபிநயா செய்தி வாசித்தார்.
லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார். மணிஷா பூசணிக்காயின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து அனைவரையும் அச்சமூட்டும் வண்ணம் நடித்து ஹலோவீன் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மைமூன் உறுதிமொழி எடுத்தார்.
மகாலட்சுமி நன்றி கூறினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்தமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஹாலோவீன் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றோரை பாராட்டினர்.