search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமிய கலை நிகழ்ச்சியுடன் சுகாதார விழிப்புணர்வு
    X

    சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கிராமிய கலை நிகழ்ச்சியுடன் சுகாதார விழிப்புணர்வு

    • மக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    கும்பகோணம்:

    என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்துடன் திருப்பனந்தாள் பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கும்படி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    பேரூராட்சி சார்பில் தினமும், 2000 கிலோ மேல் குப்பை சேகரமாகிறது. குப்பையை ஒவ்வொரு வீடாக சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பொதுமக்கள் இனி, மக்கும், மக்காத குப்பை என, தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை பேரூராட்சித் தலைவர் வனிதா ஸ்டாலின் துணைத் தலைவர் கலைவாணி சப்பானி தலைமையில், ஒவ்வொரு வீடாக சென்று, மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க உள்ள 15 வார்டுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் நடன குழுவினர் கரகம் ஆடி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் தமிழக முதல்அமைச்சர் 'மீண்டும் மஞ்சள் பை' என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    மீண்டும் மஞ்சள் பையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாகச் சென்று மக்களிடம் அறிவுறுத்தினர்.நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் குருசாமி ரமேஷ் சுரேஷ் தருமதுரை கதீஜா மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரம்வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    Next Story
    ×