search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் 5 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
    X

    வத்தலக்குண்டு- கொடைக்கானல் பிரதான நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்ற சுற்றுலா வாகனங்கள்

    கொடைக்கானலில் 5 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

    • வார இறுதி நாட்களில் கொடைக்கானல் ஸ்தம்பிக்கும் அளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்

    கொடைக்கானல் :

    கொடைக்கானலில் இரண்டு மாதமாக கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் குளு குளு சூழலை அனுபவிக்க அதிக அளவில் குவிந்தனர். வார இறுதி நாட்களில் கொடைக்கானல் ஸ்தம்பிக்கும் அளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை ரசிக்க பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் சூழலில் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணாகுகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முக்கிய சாலைகளில் பல கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரே நாளில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் 5 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதனால் சுற்றுலா பயணிகள் குறித்த நேரத்தில் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க முடியாமல் திணறினர்.அவ்வப்போது பலத்த மழை பெய்த நிலையில் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.கடும் வாகன நெரிசலால் முழுமையாக எந்த ஒரு சுற்றுலா தளத்தையும் கண்டு ரசிக்க முடியவில்லை என சுற்றுலா பயணிகள் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.

    மாலையிலும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயன்ற போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். எனவே கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதோடு நெரிசல் ஏற்படும் சமயங்களில் அதனை ஒழுங்குபடுத்த தற்காலிக காவலர்களை நியமிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×