search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இனி அனைத்து மாதங்களிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்- திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்
    X

    காயல்பட்டினத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முனுசாமி பேசிய போது எடுத்த படம்.

    இனி அனைத்து மாதங்களிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்- திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்

    • இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேலான சாலை விபத்துகள் நடக்கின்றன.
    • சிறார்களால் ஓட்டப்பட்ட வாகனங்களின் ஆர்.சி புக் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

    ஆறுமுகநேரி:

    திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் காயல்பட்டினம் பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டுநர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போக்கு வரத்து விதிமுறைகள் மற்றும் பதாகையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

    இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேலான சாலை விபத்துகள் நடக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. இதன் விளைவாக 18 ஆயிரத்து 500 பேர் இறந்து ள்ளனர் என்பது வேத னைக்குறியது. இவற்றில் 70 சதவீதம் மோட்டார் சைக்கிள் விபத்துகள் ஆகும். 18 வயதிற்கு முன்பாகவே பள்ளி மாணவ,மாணவிகள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது.

    இதனை பெற்றோர்கள் எந்த வகையிலும் அனு மதிக்க கூடாது. இதனை மீறும் பெற்றோர் களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்ட னையும் வழங்கப்படும். இதற்கான 2019 சட்டப்பிரிவு 199 (ஏ)ன் படி சிறார்களால் ஓட்டப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் ஆர்.சி புக் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். அத்து டன் சம்பந்தப்பட்ட சிறார்கள் 25 வயதிற்கு பிறகு தான் ஓட்டுநர் உரிமைத்தை பெற முடியும். ஆகவே இது பற்றிய விவரங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதுவரை ஜனவரி மாதம் மட்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இனி மாதம் தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் தமிழ்ச்செல்வன், மாரியப்பசாமி, காயல்பட்டினம் ஓட்டுனர் பள்ளி ஜமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×