search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
    X

    உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடந்தது.
    • நிகழ்ச்சியில் 6 அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 60 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 43 மற்றும் 48 இணைந்து அரசு பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    இதில் கல்லூரியின் நோக்கம், வரலாறு மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். கல்லூரி செயலர் ச. ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு உயா் கல்வி பற்றியும், கல்வி நிலையங்கள் பற்றியும், உயர்கல்விக்கான அரசு உதவி தொகை மற்்றும் வேலைவாய்ப்பு பற்றியும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

    மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் துறை ஆய்வகங்கள், நூலகம், சிவந்தி பண்பலை மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை காண்பித்து மாணவர்கள் விளக்கினார்கள்.

    நிகழ்ச்சியில் 6 அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 60 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முனைவர் ஜிம் ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்றார். முனைவர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியை கவிதா மற்றும் பேராசிரியர் அபுல்கலாம் ஆசாத் ஆகிேயார் செய்திருந்தனர்.

    Next Story
    ×