search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி தடையின்றி கற்கிறோம்; முதல்-அமைச்சருக்கு மாணவிகள் நன்றி
    X

    மாணவிகள் கயல்விழி, ஹரினி, ராஜஸ்ரீ.

    புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி தடையின்றி கற்கிறோம்; முதல்-அமைச்சருக்கு மாணவிகள் நன்றி

    • 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
    • ரூ. 1000 பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராவேன்.

    தரங்கம்பாடி:

    உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப்பெண்" திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை சுற்றுச் சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்சிவ.வீ.மெ ய்யநாதன் வழங்கினார்.

    புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்று பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

    இது குறித்து மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி கயல்விழி கூறும்போது:-

    என் உடன் பிறந்தோர் மூன்று பெண்கள், நான் மூத்தப்பெண். என் போன்ற ஏழை மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் வரபிரசாதமாகும்.

    வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுகின்ற பெண்கள் வாட்டமின்றி, வருத்தமின்றி பட்டப்படிப்பு வரை மகிழ்வோடு பயில இயலும் உரிய – உயரிய அரசுப்பணிக்கு செல்லமுடியும். நான் ரூ. 1000-ம் பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராக ஆவேன் என்றார்.

    ஏ.வி.சி. கல்லூரி மாணவி ஹரினி கூறும்போது:-முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ரூ.1000-ம் பணத்தை நான் கல்விக்காக பயன்படுத்துவேன். மீண்டும் ஒருமுறை முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.கலைமகள் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ கூறு ம்போது

    புதுமைப்பெண் திட்ட த்தின் கீழ் ரூ.1000-ம் பெற்றுக்கொண்டேன். என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×