search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதை அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம் வீட்டு உரிமையாளர்கள் போராட்டம்
    X

    அகற்றப்பட்ட வீடுகள். (உள்படம்)  போராட்டத்தில் ஈடுபட்டபெண்.

    பாதை அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம் வீட்டு உரிமையாளர்கள் போராட்டம்

    • சுரங்கப்பாலத்தை சுற்றி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் போக்கு வரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்கள் சிலர், பொக்லைன் எந்திரத்திற்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகர் அருகே, சேலம்-விருதாச்சலம் ரெயில்பாதையில் குறுக்கிடும் ஆளில்லாத ரெயில்வே கேட்டிற்கு மாற்றாக 3 ஆண்டுகளுக்கு முன் ரெயில்வே சுரங்க ப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், சுரங்கப்பாலத்தை சுற்றி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் போக்கு வரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.

    இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்து போனதால், அவரது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாததால், ஏரி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, இப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி கடந்த 3-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து, நேற்று, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில், டி.எஸ்.பி. (பொ) சக்கரபாணி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், துணை தாசில்தார் செல்வராஜ்,பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர், பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு வீடுகள், கடை மற்றும் கொட்டகைகளை அகற்றினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்கள் சிலர், பொக்லைன் எந்திரத்திற்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பட்டா நிலத்துடன் இணைத்து கட்டப்பட்டுள்ள புறம்போக்கு இடத்திலுள்ள கட்டுமானங்களை அகற்றிக்கொள்ள அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்ததால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×