என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.10 லட்சம் கடனை அடைக்க குழந்தையை கடத்தினேன்
- வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.
- செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைபட்டி சேசன்சாவடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செந்தில் குமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் மகள், 7 மற்றும் 2 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை திடீரென மாயமானான். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் லட்சுமி என்பவருடன் தங்கியிருந்த வெள்ளாள குண்டம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி பழனியம்மாள் (32) என்பவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வெள்ளாளகுண்டம் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டனர்.
இதையடுத்து பழனியம்மாைள கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், பகீர் தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு:-
எனக்கு 17 வயதில் மகள், 14 வயதில் மகன் உள்ளனர். இங்குள்ள தனியார் பால் கம்பெனியில் வேலை செய்தபோது லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தேன்.
நான் வெள்ளாள குண்டத்தில் புதிதாக வீடு கட்டியுள்னேன். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் நான் 3 நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டிற்கு வந்தேன். இந்த வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.
அந்த கடனை அடைக்க முடியாத நெருக்கடியில் இருந்த எனக்கு, செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.
அதன்படி சம்பவத்தன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றேன். ஆனால் போலீசார், துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு பழனியம்மாள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்