என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு, எம்.எல்.ஏ. வாழ்த்து
Byமாலை மலர்27 May 2023 3:20 PM IST
- ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 289-வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.
- மதியழகன் எம்.எல்.ஏ ஹரிணிக்கு சால்வை அணிவித்தும் வாழ்த்து கூறினார்.
கிருஷ்ணகிரி,
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி கோமதி தம்பதியரின் மகள் கே.ஆர். ஹரிணி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 289-வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.
தேர்வில் வெற்றி பெற்ற ஹரிணியின் இல்லத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேரில் சென்றார். அங்கு ஹரிணிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், மதியழகன் எம்.எல்.ஏ. வாழ்த்து கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக தனது வாழ்த்துக்களை கூறிய அவர், ஹரிணியை ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த பெற்றோரையும் மதியழகன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.
Next Story
×