என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுந்தராபுரத்தில் பரதநாட்டிய பள்ளியில் சிலைகள் திருட்டு
- முரளி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
- நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை திருட்டு போனது.
குனியமுத்தூர்,
கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி (வயது 50) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முரளி பரதநாட்டிய பயிற்சியை முடித்துவிட்டு நாட்டியப் பள்ளியை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்க்கும்போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உடனே உள்ளே சென்று பார்க்கும் போது சிலைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். குனியமுத்தூர் போலீசார் பதிவு செய்து விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அந்த இடம் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காட்சியளிக்கும். நள்ளிரவு சமயங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இங்கு அதிகமாவே உள்ளது . எனவே மின்விளக்கு வசதி வேண்டும். மேலும் போலீசார் இந்தப் பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தனர்.