search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் எலி மருந்து விற்றால் பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்
    X

    கடைகளில் எலி மருந்து விற்றால் பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்

    • பதிவு செய்யப்படாத 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து ரேடால் விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ரேடால் எலி மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்து விற்றால் கடம் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்படாத 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து ரேடால் விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிக நஞ்சுதன்மை கொண்டது. அபயாகரமானது.

    மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. எனவே, வேளாண் உளவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான ரேடால் என்ற எலி மருந்து மளிகை கடைகள், சூப்பர் மார்கெட் மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தினை பயன்படுத்த வேண்டாம் எனவும், திடீர் ஆய்வின் போது, ரேடால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற வழக்கு தொடரப்படும்.

    தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ரேடால் எலி மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

    அதன்படி, பூச்சி மருந்து ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி -8248096799, காவேரிப்–பட்டணம் 9080300345, பர்கூ–ர் 9842603370, வேப்ப–னஹள்ளி 9003720549, மத்தூர் 6383310480, ஊத்தங்கரை 8248749452, சூளகிரி 9443207504, ஓசூர் 9626177886, கெலமங்கலம் 9385900350, தளி 8526809678 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×