search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை- ஆ.ராசா எம்.பி. உறுதி
    X

    பொதுமக்கள் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை- ஆ.ராசா எம்.பி. உறுதி

    • ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.26.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடநாடு ஊராட்சி மன்ற அலுவலகம், தூனேரி ஊராட்சி அணிக்கொரை கிராமத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் என மொத்தம் ரூ.46.80 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டை புதுப்பிக்கும் வகையில் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் காா் நிறுத்துமிடம் அமைக்க ரூ.18 கோடியும், புதிய மாா்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்ட ரூ.18 கோடியும் என மொத்தம் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    மலை மாவட்ட மக்களை சிறப்பிக்கும் வகையில் ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆர். கணேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாராஜ், குன்னூா் கோட்டாட்சியா் பூஷ்ண குமாா், ஊட்டி நகராட்சி துணைத் தலைவா் ரவிக்கு மாா், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாதன் ,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதாசிவமணி, கடநாடு ஊராட்சி உறுப்பினர் சிவமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×