search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 வருடங்களாக பஸ் வசதி இல்லாத கிராமத்திற்கு உடனடியாக பஸ் வசதி செய்ய நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
    X

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்த காட்சி.

    5 வருடங்களாக பஸ் வசதி இல்லாத கிராமத்திற்கு உடனடியாக பஸ் வசதி செய்ய நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

    • உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • அவசர தேவைக்கு அருகில் உள்ள உடன்குடி செல்ல வேண்டுமானால் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணனிடம், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் தினசரி கூலிவேலை செய்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் திருச்செந்தூர் மற்றும் உடன்குடி செல்ல வேண்டும். ஆனால் எந்தவிதமான அரசு மற்றும் தனியார் பஸ் வசதிகள் கிடையாது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியாக ஓடிய தனியார் மினி பஸ் நிறுத்தப்பட்ட பின் எந்த விதமான பஸ் வசதியும் இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். அவசர தேவைக்கு அருகில் உள்ள உடன்குடி செல்ல வேண்டுமானால் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். அதனால் உடன்குடி மற்றும் திருச்செந்தூர் சென்று வர ஜெ.ஜெ. நகர் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரியுடன் கலந்து அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, நெசவாளர் அணி துணை த்தலைவர் சீனிவாசன், நெச வாளர் அணி துணை ச்செய லாளர் மைக்கேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×