search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாநில செயற்குழு கூட்டம்
    X

    தேன்கனிக்கோட்டையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாநில செயற்குழு கூட்டம்

    • தேன்கனிக்கோட்டையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் கோணப்பன், மேற்கு மாவட்ட தலைவர் சித்தலிங்கப்பா, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜி, துணை செயலாளர் ஜம்புலிங்கேஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் பழனிவேல் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டங்களில் வறண்ட பகுதிகளுக்கு காவிரி உபரி நீரை பம்பிங் மூலம் நீரேற்றம் செய்து ஏரி குளங்களுக்கு நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்த வேன்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி நெடுக் கல் பகுதிகளில் புற காவல்நிலையம் அமைக்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டம் காரிமங் கலம் காவல்நிலையத்தை பிரித்து பெரியாம்பட்டி அனுமந்தபுரம் பகுதிகளில் புற காவல்நிலையம் அமைக்க வேன்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×