search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் கோலாகலம்
    X

    வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்ததது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் கோலாகலம்

    • இந்த ஆண்டும் அதே போல விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் அதே போல விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் கடந்த 30-ந் தேதி 86-ம் ஆண்டு தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான தைப்பூச திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினார்கள்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

    விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஐஜகள் நடந்தன. இதில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள முருகருக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    ஊத்தங்கரை அருகே கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த கடவரப்பள்ளி காரக்குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதேபோல் வேப்பனப்பள்ளி அடுத்து தீர்த்தம் கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச தினத்தை முன்னிட்டு காலை முதலே பால முருகன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

    இதேபோல் வேப்பனப்பள்ளி அடுத்த எடரபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் செய்யப்பட்டது.மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமான, சந்தனம், விபூதி, பால், தயிர், பன்னீர், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்பட 25-க்கும் மேற்பட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகளால் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×