search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் ஊருக்குள் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு
    X

    கோத்தகிரியில் ஊருக்குள் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு

    • தேயிலை தோட்டங்கள், கரடிகளின் குடியிருப்பாக மாறி வருகின்றன.
    • அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை பிடிக்க வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளூ நுகர்வோர் அமைப்பின் தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம் ஆகியோர் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோத்தகிரி பகுதியில் கூலித்தொழிலாளிகள் அதிகளவில் வசிக்கின்றனர்.

    இவர்கள் அங்கு உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இங்கு உள்ள தேயிலை தோட்டங்கள், கரடிகளின் குடியிருப்பாக மாறி வருகின்றன. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    நீலகிரியில் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகளிலும் அரசு நிர்ணயித்த விலையின்படி, ஒரு கிலோ ரூ.60க்கு தக்காளி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×