என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்பகோணத்தில், கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
- கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேளதாளத்துடன் எடுத்து வந்தனர்.
கும்பகோணம்:
தண்ணீரின்றி கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேள தாளத்துடன் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர்.
தலைமை தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக் காரர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தி நிறுத்தினர். உடனே அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.