என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில், நாளை புத்தக திருவிழா- அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா.
- புத்தக திருவிழா நாளை தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஏ.வி.சி.திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழாவை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நாளை 10-ந்தேதி மாலை 4 மணியளவில்திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் இரா.லலிதாதலைமை வகிக்கிறார் ராமலிங்கம் எம்.பி முன்னிலை வகிக்கிறார்.எம்.எல்.ஏக்கள் நிவேதா. எம்.முருகன்,பன்னீர்செல்வம்,.ராஜகுமார், ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிநீதியரசர் கே.வெங்கடராமன்(ஓய்வு), எஸ்.பி நிஷா, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர்ச.உமாமகேஸ்வரி, நாகப்பட்டினம் மாவட்ட நூலகர் ராஜேந்திரன், மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ்வ ரவேற்புரை ஆற்றுகிறார். இணை இயக்குநர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன் நன்றி கூறுகிறார்.
இப்புத்தகத் திருவிழாவானது 10.10.2022 முதல் 20.10.2022 வரை காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.