search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் : அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
    X

    ஊட்டியில் : அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

    • குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 1-வது வாா்டுக்கு உள்பட்ட குளிச்சோலை பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    மேலும், இப்பகுதியில் குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என்றும், அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களிடம் கூறினால் அலட்சியமான பதில்களையே அவா்கள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

    இப்பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பணிக்குச் செல்வோா், முதியவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    இந்நிலையில் குளிச்சோலை பகுதியில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவல் அறிந்து வந்த புதுமந்து காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கவுன்சிலர் உடனடியாக இங்கு வர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பஸ்சை விடுவிக்கமாட்டோம் என கிராம மக்கள் கூறினா்.

    இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    Next Story
    ×