search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், அரிசி விலை கணிசமாக உயர்வு
    X

    தஞ்சையில், அரிசி விலை கணிசமாக உயர்வு

    • தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி செய்த மகசூல் பெருமளவு குறைந்தது.
    • ரூ.35-க்கு விற்கப்பட்ட அரிசி தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் உணவு தேவை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருந்தாலும் கர்நாடக அரசு உரிய காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்காததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக பாதிப்பட்டுள்ளது.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி செய்த மகசூல் பெருமளவு குறைந்தது. மேலும் அடுத்த ஆண்டு முதல் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாய நிலை ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    இது தவிர கர்நாடகாவில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரக்கூடிய அரிசி லோடுகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.இதனால் மைசூர் பொன்னி ,கர்நாடக பொன்னி போன்ற அரிசிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 வீதம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அரிசி வியாபாரிகள் கூறும்போது:-

    கடந்த ஆறு மாதங்களில் ரூ.35-க்கு விற்கப்பட்ட அரிசி தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது . கர்நாடகா, தமிழகத்திலும் அரிசி உற்பத்தி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் விலை ஏற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள நெல்களை அரவை செய்து தற்போது குறைந்து விலைக்கு வழங்கி வந்தாலும் இனி வரக்கூடிய காலங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனர். அரிசி விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×