என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், பெண்ணை காரில் கடத்திய 5 பேர் கைது
- வலுக்கட்டாயமாக அவரது மனைவியை 5 பேர் சேர்ந்து காரில் கடத்தினர்.
- ஒரு மணி நேரத்திலேயே கடத்தல் கும்பலிடம் இருந்து பெண்ணை பத்திரமாக போலீசார் மீட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது டிரைவர்.
இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார்.
அப்போது இவருக்கும் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் திருச்சி எல்.ஐ.சி காலனி கே.கே.நகரை சேர்ந்த வேதகிரி என்ற வினோத் (39) என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் வினோத் தனது சகோதரி பிரீத்தி (41), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் (44), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (32), திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ராஜா (32) ஆகியோருடன் ஒரு காரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அந்த டிரைவர் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டில் அவர் இல்லை.
இதனால் வலுக்கட்டாயமாக அவரது மனைவியை 5 பேர் சேர்ந்து காரில் கடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த உடனே போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா மேற்பார்வையில் தமிழ் பல்கலைக்கழகம் சப்- இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ, கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் உடனடியாக போலீஸ் வாகனத்தில் ஏறி அந்த காரை பின் தொடர்ந்தனர்.
தஞ்சை மாவட்டம் புதுக்குடி எல்லையில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், பிரீத்தி, மாரியப்பன், கோபாலகிருஷ்ணன், ராஜா ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் வினோத்துக்கும், தஞ்சை டிரைவருக்கும் இடையே ஏற்கனவே முன்னோரதம் இருந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு டிரைவரின் மனைவியை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.
காரில் கடத்தப்பட்டு 1 மணி நேரத்திலேயே கடத்தல் கும்பலிடம் இருந்து பெண்ணை பத்திரமாக போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்