என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
- இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ( சி.ஐ.டி.யூ) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் கோவிந்தராஜு, மண்டல செயலாளர் ராஜாராமன், வட்ட செயலாளர் காணிக்கராஜ், பொருளாளர் சங்கர், துணைத் தலைவர் ஆரோக்கிய சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.இந்தப் போராட்டத்தில் இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் கோட்டத் தலைவர்கள் ஆறுமுகம் , கலைச்செல்வன், கோட்ட செயலாளர்கள் சேக் அகமது உஸ்மான் உசேன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட செயலாளர்கள் அறிவழகன் நன்றி கூறினார்.