search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், தேசிய அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
    X

    மாரத்தான் போட்டியை மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், தேசிய அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

    • முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
    • 25 மாணவ- மாணவிவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் கல்வியே நாட்டின் முதல் அரண், போதை பொருள் தடுப்பு மற்றும் சிறுவர்- சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வுக்காக இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 3-வது ஆண்டு தேசிய அளவிலான மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு தணுவர்சன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் உலகநாதன், கவுரவத் தலைவர் டாக்டர் சாத்தப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த மாரத்தான் போட்டியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ( ஓபன் ) பிரிவில் 20 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 3 பிரிவுகளிலும் சேர்த்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ( ஓபன் ) பிரிவில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    இதேபோல் 2 முதல் 5-ம் இடத்தை பிடி த்தவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் 50 வீரர்- வீராங்கனைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    இதேபோல் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர், மாணவிக்கு தலா ரூ.10 ஆயிரம், கோப்பை வழங்கப்பட்டன. 2 முதல் 5-வது இடங்களைப் பிடித்த மாணவ -மாணவிகளுக்கு முறையே தலா ரூ .6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    மேலும் 25 மாணவ- மாணவிவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், ஆலோசகர் ரத்தினவேல் , போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொ றியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×