என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருக்கடையூரில், மாடு- குதிரை எல்கை பந்தயம்
- மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
- 2,3 -ம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் 43-ம் ஆண்டு, நாராயணசாமி 10-ம் ஆண்டு நினைவையொட்டி மாடு, குதிரை எல்கை பந்தயம் காணும் பொங்கல் விழாவில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார்.
செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான அமுர்த விஜயகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் வரவேற்று பேசினார்.
விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு மாடு மற்றும் குதிரை எல்கை பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து போட்டி அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை நடைபெற்றது. மாட்டிற்கான எல்கை பந்தயம் 6கி.மீ தூரம் உள்ள அனந்தமங்கலம் வரையும், குதிரைக்கான எல்கை பந்தையம் 8கி.மீ தூரம் உள்ள தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடையூர் திரும்பும்படி நிர்ணயிக்கப்பட்டது.
சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும் குதிரைகள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் அவைகள் மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
போட்டியில் வெற்றிப்பெற்ற சின்னமாட்டிற்கு ரூ.8 ஆயிரம், நடுமாட்டிற்கு ரூ.10 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.12 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.15 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.18 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் நினைவு பரிசுகள் வெற்றிப்பெற்ற மாடு, குதிரை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கும் பல்வேறு பரிசுகள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது.
போட்டிகளில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு, குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.
பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர். நிறைவாக பந்தயக்குழு நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்