search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானங்காத்தான் காலனியில் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா - கனிமொழி எம்.பி.,அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
    X

    மானங்காத்தான் கிராமத்தில் புதிய தொகுப்பு வீடுகளை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தபோது எடுத்தபடம். அருகில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் உள்ளனர்.

    மானங்காத்தான் காலனியில் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா - கனிமொழி எம்.பி.,அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

    • ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில், 1996-ம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது.

    சிதிலமடைந்திருந்த இந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் முயற்சியால், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது.

    இதில் 9 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி

    எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப் பாண்டியன், சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப் பாளர் ராஜதுரை, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக் குமார், முன்னாள் பஞ்சா யத்து தலைவர் செல்லையா, கோவில்பட்டி ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர, கிளை நிர்வாகிகள், கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாண்டியராஜன், சுப்பு லட்சுமி, பொறியா ளர்கள் சித்ரா, செல்வாக்கை யும், செந்தில், பீர் முஹம்மது, மற்றும் பிற துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×