என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்துப்பேட்டை, ஆவல்சின்னாம்பாளையத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை திறப்பு விழா
- வங்கியின் 532-வது கிளை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் சி.ஆர்.எம். வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
- விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தமிழநாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
முத்துப்பேட்டை
கிளை திறப்பு
அதன்படி நாடு முழுவதும் வங்கி விரிவாக்க நடவடிக்கைகளில் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏற்கனவே நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 531 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களுடன் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வங்கியின் 532-வது கிளை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் சி.ஆர்.எம். வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. வங்கி பொதுமேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முத்து பேட்டை அனைத்து முஹல்லா தலைவர் முகம்மது அலி என்ற ஜெர்மன் அலி கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.
விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
533-வது கிளை
இதேபோல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 533-வது கிளை கோவை மாவட்டம் ஆவல் சின்னாம்பாளையத்தில் சி.ஆர்.எம்.வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதனை ஜமீன் கொட்டாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் கிளைகள் திறக்க திட்டம்
இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், பங்கு சந்தையில் பட்டிய லிட்ட பிறகு வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி 532-வது கிளை முத்துப்பேட்டையிலும், 533-வது கிளை ஆவல் சின்னாம்பாளையத்திலும் திறக்கப்பட்டு உள்ளது.
இன்னும் அதிகமான கிளை களை நாடு முழுவதும் திறக்க திட்டமிட்டு இருக்கிறோம். திறப்பு விழாவை வங்கியின் அனைத்து உடைமை தாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்